திருவண்ணாமலை கோட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு கணினி பயிற்சி

திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள ஊராட்சி செயலர்களுக்கு கணினி பயிற்சி நடைபெற்றது.

Update: 2022-11-12 17:15 GMT

சென்னை மறைமலை நகர் ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனமானது திருவண்ணாமலை ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்துடன் ஒருங்கிணைந்து தென்மாத்தூரில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் திருவண்ணாமலை கோட்டத்திற்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு 2 நாள் அடிப்படை கணனி பயிற்சி நடைபெற்றது. பயிற்சி முகாமை ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரண்யாதேவி, திருவண்ணமாலை கோட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சம்பத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த பயிற்சியில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், கலசபாக்கம், போளூர், ஜவ்வாதுமலை, கீழ்பென்னாத்தூர் ஆகிய 9 ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு கணினியின் பயன்பாடு, பொது நிதி மேலாண்மை கணக்கு மற்றும் அதன் மின்னணு பரிமாற்ற முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாகவே அனைத்து கிராம ஊராட்சி கணக்குகளும் செயல்படுத்தப்படும் என்பதால் கிராம ஊராட்சி செயலர்கள் கணினி குறித்த அறிவாற்றல் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த பயிற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக மாவட்ட வள மையத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஏசுதாஸ் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்