ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி சட்ட விழிப்புணர்வு முகாம்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி சட்ட விழிப்புணர்வு முகாம்;

Update: 2023-06-23 12:09 GMT

ஆரணி

ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆரணி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை எம்.வசந்தா வரவேற்றார். நீதித்துறை நடுவர் ஆர். கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசுகையில், ''1910-ம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் கோகுலே, அனைவருக்கும் கல்வி சட்டம் கண்டிப்பாக வரவேண்டும் என குரல் கொடுத்தார். 2009-ம் ஆண்டில் இது சட்ட வடிவமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

கட்டாய கல்வி என்பது 6 வயதுக்கு மேற்பட்ட 14 வயதுக்குட்பட்ட அனைவரும் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும் என்பது ஆகும் அதற்காக மத்திய அரசு 65 சதவீதமும் மாநில அரசு 35 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

கல்வியில் இடை நின்ற மாணவர்களை கணக்கெடுத்து அவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்த்து அவர்களின் கல்வித் தரத்தையும் அரசு வழங்கி வருகிறது.

குழந்தைகளிடம் செல்போன்களை கண்டிப்பாக கொடுக்காதீர்கள் தேவைப்பட்டால் மட்டுமே செல்போன்களை பயன்படுத்துங்கள்'' என்றார்.

கருத்தரங்கில் அரசு வழக்கறிஞர் கே.ராஜமூர்த்தி, வக்கீல் சங்க துணைத் தலைவர் எஸ்.ஸ்ரீதர், முன்னாள் அரசு வக்கீல் வி.வெங்கடேசன், மூத்த வக்கீல்கள் டி.பார்த்தீபன், ஆர். நிர்மலா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்