தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி;

Update: 2022-08-15 19:23 GMT

பயணிகள் நிழற்குடை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குதரவை பஞ்சாயத்து வைரவன்கோவில் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் இங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பள்ளி, மாணவர்களும் முதியோர்களும் மழையிலும் வெயிலிலும் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இந்த பகுதியில் பயணிகள் நிழற் குடை அமைக்க அதிகாாிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளைச்சாமி, தெற்குதரவை.

சுற்றுச்சுவர் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் உலையூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் மழைக் காலங்களில் விஷப்பூச்சிகள் உள்ளே வரும் அபாய நிலை உள்ளது. எனவே இந்த பள்ளியை சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், பொக்கனாரனேந்தல்.

சேதமடைந்த நிழற்குடை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிழற்குடையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குடையால் பொதுமக்கள் பலர் இதனை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்திரன், திருப்புல்லாணி.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகனூர் ஊராட்சி சத்திரக்குடி சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. போக்குவரத்து இடையூறுகளில் சிக்கி வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரேசன், பரமக்குடி.

பராமரிப்பற்ற சாலை

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் பகுதியிலிருந்து கடற்கரை செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேல்ராஜன், மாரியூர்.

Tags:    

மேலும் செய்திகள்