பூலாங்குறிச்சியில் ஒரு குடும்பத்தை புறக்கணித்து மஞ்சுவிரட்டு நடத்துவதாக புகார் மனு
பூலாங்குறிச்சியில் ஒரு குடும்பத்தை புறக்கணித்து மஞ்சுவிரட்டு நடத்துவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் நடத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து வரும் வகையில் பூலாங்குறிச்சியை சேர்ந்த முத்து என்பவர் ஊர் கணக்க பிள்ளையாக உள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக ஊர் வழக்கப்படி கணக்கப்பிள்ளை குடும்பமாக இருந்து வந்தாகவும், தற்போது பாரம்பரியத்தை மாற்றி இந்த ஆண்டு அவரை மஞ்சுவிரட்டில் இருந்து புறக்கணித்து மஞ்சுவிரட்டு நடத்துவதாகவும் முத்து, முதல்-அமைச்சரின் தனி பிரிவிற்கும், கலெக்டர் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியரிடமும் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கிராமத்தினர் மஞ்சுவிரட்டு நடத்தும் பட்சத்தில் எங்களது குடும்பத்தையும் சேர்த்து பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் மாறாமல் ஆண்டுதோறும் நடப்பதை போல் இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.