புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-21 19:00 GMT

குடிநீர் வசதி அவசியம் 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் குடிநீர் வசதியின்றி பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

* திருவேங்கடம் தாலுகா குளக்கட்டாகுறிச்சி தெற்கு காலனியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே போதிய குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.

சேதமடைந்த வாறுகால் 

கடையநல்லூர் நகராட்சி முத்துகிருஷ்ணாபுரம் சிந்தாமதார் பள்ளிவாசல் தென்புற நுழைவுவாயில் அருகில் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் வாறுகாலுக்குள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த வாறுகாைல சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-மணிகண்டன், கடையநல்லூர்.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

கடையத்தில் இருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு தென்காசி, மதுரை வழியாக திருப்பூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் கடையத்தில் இருந்து திருப்பூருக்கு நேரடி பஸ் வசதி இ்ல்லாததால் பொதுமக்கள் நெல்லை, தென்காசி சென்று, அங்கிருந்து மாறி செல்கின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஜெகதீசன் ஜான், பாவூர்சத்திரம்.

ஆபத்தான மின்கம்பம்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பம் சரிந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

Tags:    

மேலும் செய்திகள்