தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-18 18:45 GMT

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினோத், காளையார்கோவில்.

குறைந்த மின்னழுத்த பிரச்சினை

சிவகங்கை மாவட்டம் உறுதிகோட்டை ஊராட்சி திட்டுக்கோட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மக்கள் பயன்படுத்தும் மிக்சி, கிரைண்டர், டி.வி. போன்ற மின்சாதன பொருட்களும் அவ்வப்போது பழுதாகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், உறுதிக்கோட்டை,

தெருவிளக்குகள் வேண்டும்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள தெருவில் உள்ள 4 மின்விளக்குகள் எரிவது இல்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், வைகைவடகரை.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பழைய சருகனி ரோடு காந்தி ரோடு சந்திப்பில் இருந்து புதிய பாலம் வரை சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜீஸ் கான், தேவகோட்டை

அடிக்கடி ஏற்படும் மின்தடை

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சரவணா நகர், மீனாட்சி கார்டன் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வினியோகிக்கப்படும் மின்சாரமும் குறைந்த மின்னழுத்தத்தில் இருப்பதால் மின்சாதன பொருட்கள் சேதமடைகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆதப்பன், குன்றக்குடி.

Tags:    

மேலும் செய்திகள்