தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-12-11 17:46 GMT

குண்டும் குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து இந்திராநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

செல்வக்குமார், கல்லல்.

பகலில் எரியும் தெருவிளக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் உள்ள தெருவிளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் இந்த பகுதியில் மின்சாரம் வீணாகிறது. எனவே இந்த பகுதியில் பகலில் தெருவிளக்குகள் எரிவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

சேதுராமன், திருப்பத்தூர்.

சுற்றுச்சூழல் மாசு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கிய குப்பைகளில்பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக குவிந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசடையும் நிலை உள்ளது. எனவே சாலையில் குப்பைகளை வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பசாமி, மானாமதுரை.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துபழனியப்பன், காரைக்குடி.

வாருகால் வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி 18-வது வார்டு பகுதியில் கழிவுநீர் செல்ல சரியான வாருகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வாருகால் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜ்மல்கான், திருப்புவனம்.

Tags:    

மேலும் செய்திகள்