புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-11-23 18:45 GMT

பொதுமக்கள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.வி. மங்கலம் ஊராட்சியில் உள்ள சுடுகாட்டில் முள், புதர் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியினை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், எஸ்.வி.மங்கலம்.

நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சைக்கிள் நிறுத்துவதற்கு சரியான இடவசதி இல்லை. இதனால் மாணவிகள் தங்கள் சைக்கிளை பள்ளியின் வெளியில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அவ்வப்போது சில சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. எனவே அதிகாரிகள் மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், மானாமதுரை.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நகரின் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜய், இளையான்குடி.

சேதமடைந்த நிழற்குடை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைகிராமம் சாலையில் சிறுபாலை உள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. நிழற்குடையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது.இதனால் நிழற்குடையை பயன்படுத்தும் மக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், இளையான்குடி.

பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதியில் ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது மோதுவதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறன்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினோத்குமார், திருக்கோஷ்டியூர்.


Tags:    

மேலும் செய்திகள்