புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-08-30 17:45 GMT

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி ஊராட்சி தெருக்களில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பெண்கள், சிறுகுழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களை துரத்தி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஹக்கீம் பாட்சா, சிவகங்கை.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.

யோகராஜா, காளையார்கோவில்.

ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லுக்கட்டி மற்றும் கண்ணன் பஜார் பகுதிகளில் சிலர் நடைபாதையை ஆக்கிரமித்து மேற்கூரையை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் அனுமதியின்றி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேத்யூ டி.ராஜன், காரைக்குடி.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தியாகிகள் ரோடு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனஓட்டிகள் சிலர் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே இந்த சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு அதிகாரிகள் தடை செய்ய வேண்டும்.

முகமது ஜமீல், தேவகோட்டை.

கண்மாய் தூர்வாரப்படுமா?

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பொன்னங்குடி கண்மாய் தூர்வாரப்படவில்லை. கனமழையால் கண்மாயில் இருந்து நீரானது நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு தெருக்களில் புகுந்தது. இதனால் இரவில் தூங்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை தூர்வார வேண்டும்.

இந்துமதி, கல்லல்.

Tags:    

மேலும் செய்திகள்