புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-28 19:25 GMT

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் அருள்நகர் பகுதியில் நாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கடியால் தினமும் சிலர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே இந்த நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்திஸ்குமார், மதுரை.

பஸ் வசதி தேவை

மதுரை மாவட்டம் சாப்டூரில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் போதிய அளவு பஸ் வசதி இல்லை. இதனால் இந்த வழியாக பயணம் செய்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வல்லவராஜா, உசிலம்பட்டி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் 3-வது வார்டு பிரசன்னா காலனி 5-வது தெருவில் கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை அமைக்கவும் மற்றும் கழிவுநீர் கால்வாயை அவ்வப்போது தூர்வாரவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிவாசன், அவனியாபுரம்.

சேறும், சகதியுமான சாலை

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் 90-வது வார்டு ராஜீவ் காந்தி தெரு, குமரன் தெரு மற்றும் மாடர்ன் தெரு போன்ற தெருக்களில் தற்போது பெய்த மழையால் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மக்கள் நடந்து செல்லும் பொழுது, வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சாலைகள் அமைத்து தரஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரநாத், மதுரை.

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை கிராமம் மேலக்குயில்குடி உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுவதால் மாணவர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தீபன், நாகமலைபுதுக்கோட்டை.




Tags:    

மேலும் செய்திகள்