எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது;

Update: 2023-04-08 01:46 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், விசாரணை நடத்த தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரிய நிலையில், தமிழக அரசு இந்த அனுமதியை கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்