தரமற்ற முறையில் கடலை மிட்டாய் தயாரிப்பதாக புகார்

தரமற்ற முறையில் கடலை மிட்டாய் தயாரிப்பதாக புகார் வந்ததால் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.;

Update: 2023-06-21 19:12 GMT

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் கடலை மிட்டாயில் இரும்பு கம்பி இருக்கும் படத்தை வாடிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தரமற்ற கடலை மிட்டாய் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

இதுகுறித்து வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், வாணியம்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி (பொறுப்பு) ஆகியோர் வாணியம்பாடியில் உள்ள கடலை மிட்டாய் தயாரிக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கடலை மிட்டாய்களும் பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, உரிமையாளரிடம் சுகாதாரமான முறையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும், கடலை மிட்டாய் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்