புளியமரம் வெட்டி கடத்தல் –போலீசில் புகார்
புளியமரம் வெட்டி கடத்தல் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள நானாமடை கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மனைவி புஷ்பம் (வயது 65). இவர் காலையில் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் அருகே உள்ள வயலில் நின்றிருந்த 20 ஆண்டு பழமையான புளியமரம் வேருடன் வெட்டி கடத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புஷ்பம் மரத்தை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலைக்கிராமம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.