காங்கியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டிகள்

காங்கியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.;

Update: 2022-11-17 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் காங்கியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகள், நடனப்போட்டிகள், பேச்சுப்போட்டி, தண்ணீர் நிரப்புதல், தடை தாண்டி ஓடுதல், பலூன் உடைத்தல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில் செவித்திறன், கற்றல் குறைபாடு, உடலியக்க குறைபாடுடைய மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் புனிதவதி, சிறப்பு பயிற்றுனர்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா, இயன்முறை மருத்துவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்