கராத்தே பட்டைய தேர்வுக்கான போட்டி

கராத்தே பட்டைய தேர்வுக்கான போட்டி நடந்தது.

Update: 2022-06-12 18:16 GMT

கரூர்,

கரூரில் கியாகுசேன் கராத்தே பட்டையம் வழங்குவதற்கான தேர்வு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரவுன், கிரீன், எல்லோ, புளு, ஆரஞ்சு உள்ளிட்டவற்றில் பட்டையம் வழங்குவதற்கான தேர்வில் 6 வயது முதல் 35 வயது வரை உடைய 160 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிகான் இந்திய தலைமை பயிற்சியாளர் ராமதாஸ் கலந்து கொண்டு பட்டையம் பெறுவதற்கான கராத்தே போட்டியை நடத்தி வீரர்களை தேர்வு செய்தார். இதில் கியான்ஸ், கட்டா, கராத்தே உள்ளிட்ட பிரிவுகளில் கருப்பு பட்டை பெற்ற 6 பயிற்சியாளர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்