குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 14 பெண்களுக்கு இழப்பீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 14 பெண்களுக்கு இழப்பீடு தொகையை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 பேருக்கு இழப்பீட்டு தொகையாக தமிழக அரசு ரூ.8 லட்சத்து 17 ஆயிரம் வழங்கி உள்ளது. இந்த நிவாரணத் தொகையை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.