போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் டோல்கேட்டால் பயணிகள் அவதி
கே.வி.குப்பம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் டோல்கேட்டால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கே.வி.குப்பம் அடுத்த பில்லாந்திப் பட்டு பகுதியில் காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே டோல்கேட் கட்டப்பட்டு சுமார் 2 வருடத்திற்கு மேல் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த டோல்கேட்டால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது. டோல்கேட் அமைக்க சரியான இடம் இது இல்லை என்று பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்புகளையும் மீறி கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டோல்கேட்டை அகற்றிவிட்டு, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.