200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

திமிரியில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-10-19 19:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் 200 கர்ப்பிணிகளுக்கு குங்குமம், மஞ்சள், வளையல், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களும், மதிய உணவும் வழங்கப்பட்டது. முன்னதாக கர்ப்பிணிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை கோலமாக வரைந்திருந்ததையும், ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தன்ராஜ், நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், பேரூராட்சி தலைவர்கள் மாலா இளஞ்செழியன், மனோகரன், துணைத் தலைவர்கள் கவுரி தாமோதரன், ரேகா கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர்கள் அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ரமேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்