இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்;

Update: 2023-07-08 18:45 GMT

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி திருமருகலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று திருமருகல் பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டு கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், கடைமடை பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டியும், குறுவை பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், திருமருகல் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் சரவணன், செல்வகுமார், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் அக்பர் அலி, ரவி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடு்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்