இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்; 114 பேர் கைது

சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் 114 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-14 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் எரிவாயு விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர் விரோத சட்டங்கள், விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். திருவேங்கடம் தாலுகா செயலாளர் அந்தோணி ராஜ், சங்கரன்கோவில் தாலுகா துணை செயலாளர் மனுவேல்ராஜன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, மாவட்ட துணை செயலாளர் வேலாயுதம், மாவட்ட நிர்வாக குழு சமுத்திரக்கனி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சங்கரன்கோவில் முன்னாள் தாலுகா செயலாளர் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், பழனிமுருகன், ஜான், முருகன், பவுல்ராஜ், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 35 பெண்கள் உள்ளிட்ட 114 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்