இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
அம்மாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.;
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ். பாலு, மாதர் சங்க மாவட்ட தலைவர் தாமரைச்செல்வி, நகர செயலாளர் ராஜாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தேசத்தை பாதுகாக்க பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம் என்கின்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்து அடுத்த மாதம்(மே) 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ஒன்றிய அளவிலான நடைபயணம் பிரசார இயக்கம் இயக்கமட் நடத்துவது. அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 5 குழுக்களாக பிரிந்து ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் நடைபயண பிரசார இயக்கத்தை நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.