சிதம்பரத்தில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம்,
சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட குழு சித்ரா, நகர குழு சையத் இப்ராஹிம், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வி.எம். சேகர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார்.
ஆர்ப்பாட்டமானது, காரல் மார்க்ஸ் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சை கண்டித்து, நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வட்டக் குழு உறுப்பினர்கள் புலவழகன், வேல் வேந்தன், காமராஜ், அர்ஜுனன், பன்னீர்செல்வம், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.