விழுப்புரத்தில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வம், நாராயணன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு வகிதாநிஜாம் கண்டனம் தெரிவித்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் சரவணன், கலியமூர்த்தி, இன்பஒளி, ராமச்சந்திரன், திலகவதி, நிதானம், செல்வகுமார், ராதாகிருஷ்ணன், அய்யனாரப்பன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.