தென்காசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலுக்கு முயற்சி; 105 பேர் கைது

தென்காசியில் சாலை மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-12 18:45 GMT

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், 100 நாட்கள் வேலையை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கி துரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாரியப்பன், கிட்டப்பா, சுப்பிரமணியன், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 36 பெண்கள் உள்பட 105 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்