மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
செம்பனார்கோவில் தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.;
பொறையாறு:
செம்பனார்கோவிலில் உள்ள தபால் நிலையம் முன்பு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராமன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தையொட்டி கட்சியினர் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் இருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையம் முன்பு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் 31 பேரை, செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.