ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மாற்றம்

கடலூர் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மாற்றம்;

Update:2023-07-24 00:15 IST

கடலூர்

கடலூர் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பொறுப்பேற்ற 4 மாதங்களுக்குள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கடலூர் மாநகராட்சி புதிய ஆணையாளராக தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையர் காந்திராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்