வணிக வரித்துறை ஊழியர்கள் போராட்டம்

தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரித்துறை ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இதனால் நாகர்கோவிலில் உள்ள அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.;

Update: 2023-03-15 18:45 GMT

நாகர்கோவில்:

தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரித்துறை ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இதனால் நாகர்கோவிலில் உள்ள அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊழியர்கள் போராட்டம்

குமரி மாவட்ட வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடந்தது.

அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும், தேவையற்ற கால அவகாசம் இன்றி புள்ளி விவரம் கேட்பதையும், அடிக்கடி கால நேரமின்றி மேற்கொள்ளப்படும் தொடர் ஆய்வுகளையும் கைவிட வேண்டும், விஞ்ஞான பூர்வமற்ற வருவாய் குறியீட்டை நீக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

அலுவலகம் வெறிச்சோடியது

போராட்டத்தில் சுமார் 100 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக நாகர்கோவிலில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்