சுதந்திர போராட்ட தியாகிக்கு நினைவு பரிசு

சுதந்திர போராட்ட தியாகிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.;

Update: 2022-06-29 16:09 GMT

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 99). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். மேலும் சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றவர். இவரை கவுரவிக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏ.கே. பிரீத் நேற்று சுதந்திர போராட்ட தியாகி நாராயணசாமி வீட்டிற்கு சென்று அவருக்கு சந்தன மாலை, சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட பாதுகாப்பு படை போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்