செல்போன்களுக்கு வௌ்ளிக்கிழமை வரும்பேரிடர் கால எச்சரிக்கைக்குபதற்றமடைய வேண்டாம் என்றுகலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
செல்போன்களுக்கு வௌ்ளிக்கிழமை வரும் பேரிடர் கால எச்சரிக்கைக்குபதற்றமடைய வேண்டாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையால் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி இன்று (வெள்ளிக்கிழமை) செல்போன்களுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசரகாலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இந்த சோதனை நடைபெறுகிறது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.