தென்காசி மேம்பாலத்தில் வண்ண விளக்குகள்

சுதந்திர தினத்தையொட்டி தென்காசி மேம்பாலத்தில் வண்ண விளக்குகள்

Update: 2022-08-14 17:12 GMT

தென்காசி இலஞ்சி விலக்கிலிருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் ெரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பல்வேறு அரசியல் மற்றும் மதம் சார்ந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தன. இதனை தவிர்க்கும் விதத்தில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்படும் இடத்தில் பல்வேறு வண்ண பெயிண்டிங்குகளை அடித்து அதில் பொதுமக்கள் கவரும் விதத்தில் வாசகங்களை எழுதி வைக்க ஏற்பாடு செய்தார். தற்போது 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அதில் சாதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு வண்ண விளக்குகளை எரிய செய்துள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், தென்காசி துணை சூப்பிரண்டு மணிமாறன் ஆலோசனையின்படி போலீசார் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனைப் பார்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்