மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-13 18:44 GMT

சாயல்குடி, 

மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பிச்சைமணி (வயது 58). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அலுவல் சம்பந்தமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முதுகுளத்தூர் சாலையிலிருந்து கடலாடி நோக்கி கடலாடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் காளீஸ்வரன்(21) மோட்டார் சைக்கிளில் வந்தார். கடலாடி யூனியன் அலுவலகம் அருகே வரும்போது இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் திடீரென மோதிக்கொண்டன.

பரிதாப சாவு

இதில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த காளீஸ்வரன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்