மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானாா்.;

Update: 2022-09-17 19:37 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிசாவடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 50), தொழிலாளி. சம்பவத்தன்று இவர், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடன் கூடுவெளி சாவடி மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தேவதாஸ் பலத்த காயமடைந்தார். சிவக்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து பலத்த காயமடைந்த தேவதாஸ் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்