மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி

வந்தவாசியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2022-09-27 12:45 GMT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43), கண்பார்வை குறைபாடு உடையவர். இவரது உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு, இரவில் ஊருக்கு திரும்பினர்.

வந்தவாசி-சேத்பட் சாலையில் தனியார் நூற்பாலை அருகே வந்த போது, இவர்களது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும் திடீரென மோதிக்கொண்டன.

இதில் படுகாயம் அடைந்த பெருமாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்