மின் சேமிப்பு குறித்து கல்லூரி மாணவர்கள், மின்வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
மின் சேமிப்பு குறித்து கல்லூரி மாணவர்கள், மின்வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டம் திருத்தணி கோட்டம் சார்பாக மின்சார சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் இருந்து தொடங்கிய பேரணியை திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேரணி அரக்கோணம் சாலை, பஸ் நிலையம் வழியாக வலம்வந்து கமலா திரையரங்கம் அருகே முடிவடைந்தது. பேரணியில் உதவி கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், திருத்தணி உதவி பொறியாளர்கள் வேண்டாமிருதம், தமிழரசன் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மின்சார சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும் மின்சார சிக்கனம் குறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.