கல்லூரி மாணவி, இளம்பெண் மாயம்
கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே நடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் மகள் அபினா(வயது 17). இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் டி.எம்.எல்.டி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அபினா திடீரென மாயமானார்.
இதேபோல் உடையார்பாளையம் அழிசுகுடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகள் நதியா(19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பஞ்சு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த நதியா திடீரென மாயமானார். இதுகுறித்து இவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபினாவையும், நதியாவையும் தேடி வருகின்றனர்