கல்லூரி மாணவர் தற்கொலை

போடியில், கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-01-14 17:10 GMT

போடி நந்தவனம் 3-வது தெருவை சேர்ந்தவர் ராமகுருநாதன் (வயது 53). நாதஸ்வர கலைஞர். அவருடைய மனைவி கோவிந்தலட்சுமி. இந்த தம்பதியின் மகன் ராமசுப்பிரமணி (18). இவர், போடியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக இவர், தனக்கு படிப்பு சரியாக வரவில்லை எனக்கூறி கல்லூரிக்கு செல்லாமல் இருந்தார். இதனால் அவரது பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அவரது அறைக்கு தாய் கோவிந்தலட்சுமி சென்றார். அப்போது ராமசுப்பிரமணி, தனது அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டநிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார். கோவிந்தலட்சுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

பின்னர் ராமசுப்பிரமணியை இறக்கி, ஆட்டோவில் ஏற்றி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராமசுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராமசுப்பிரமணியின் தந்தை ராமகுருநாதன் போடிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்