கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை;

Update: 2022-12-18 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூரை சேர்ந்த அழகுமுனியசாமி மகள் சரண்யா (வயது 18). இவர் ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் தனியாக இருந்த போது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் சரண்யா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்