நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் கீர்த்திகா (வயது 18). இவர் பேட்டையில் உள்ள அரசு கல்லூரி படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வண்ணார் பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கீர்த்திகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.