கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
விருத்தாசலம்
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 20). இவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண்ணும் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலமுருகன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலமுருகனிடம் அந்த மாணவி கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.