கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

Update: 2022-08-26 18:12 GMT

கரூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மகள் ஸ்ரீகமலி (வயது 22). இவர் கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வந்த ஸ்ரீகமலி திடீரென மாயமானார். இதையடுத்து அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து மாயமான ஸ்ரீகமலியை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்