அடையாளம் தெரியாத வாகனம் மோதிகல்லூரி மாணவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலியானாா்.

Update: 2023-08-21 18:45 GMT


விழுப்புரம் அருகே உள்ள சேர்ந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேசின் மகன் துளசிராமன் (வயது 18). இவர் கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வளவனூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நல்லரசன்பேட்டை என்ற இடத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்