செல்போன் பேசிக்கொண்டு சென்றபோது ரயில் மோதி கல்லூரி மாணவர் பலி

திண்டுக்கல் அருகே செல்போனில் பேசிக்கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.;

Update: 2022-07-08 13:16 GMT

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் ஜெகன் (வயது 16). இவர் கூடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை முடி வெட்டிவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது எரியோட்டிற்கும் பாளையத்திற்கும் இடையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவளத்தை கடக்க முயன்றவர், திருநெல்வேலியில் இருந்து தாதர் நோக்கி சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். ஜெகனின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்