விடுதியிலேயே பெண் குழந்தை பெற்றெடுத்த கல்லூரி மாணவி - லிவிங் டுகெதரால் நேர்ந்த விபரீதம் - தர்மபுரியில் பகீர் சம்பவம்

இளைஞருக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கும் விடுதி நிர்வாகத்தினர் போலீசார் மூலம் தகவல் தெரிவித்தனர்.;

Update:2024-02-15 05:41 IST

கோப்புப்படம் 

தர்மபுரி,

தர்மபுரி அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அதிகாலையில் வயிற்று வலியால் துடித்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது விடுதியை பரபரப்புக்குள்ளாக்கியது. உடனே, சம்பவ இடத்திற்கு வந்த விடுதி காப்பாளர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பக்கத்து ஊரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மனோஜ் என்பவருடன் மாணவி லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. உடனே, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞருக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கும் விடுதி நிர்வாகத்தினர் போலீசார் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இரு தரப்பும் மருத்துவமனை விரைந்த நிலையில், இதுவரை எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவி விடுதியில் சேரும் போதே 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், இது குறித்து விடுதி நிர்வாகத்தினர் கேட்டபோது தன் உடல்வாகே இப்படித்தான் எனக் கூறி மாணவி மூடி மறைத்ததாகவும் கூறப்படுகிறது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்