கல்லூரி மாணவி திடீர் சாவு
சேரன்மாதேவியில் கல்லூரி மாணவி திடீரென இறந்தார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி ஆலடி மணிநகரைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். அதில் மூத்த மகள் பாயல் (வயது 19). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவி பாயல், இரவு உணவு சாப்பிட்ட பிறகு திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே பாயல் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து, பாயல் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.