கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-12-29 20:10 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புதுப்பேட்டை குடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. டிரைவரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெயக்கொடி. இந்த தம்பதிக்கு திவ்யா, கவியரசி, தீபிகா என 3 மகள்களும், தமிழ்வளவன் என்ற ஒரு மகனும் உண்டு. இதில் திவ்யாவிற்கு திருமணமாகிவிட்டது. கவியரசி ஒரு கல்லூரியில் எம்.ஏ. படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயக்கொடி பருத்தி வயலுக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து சமைத்து தருமாறு கவியரசியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கவியரசி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் கவியரசியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கவியரசி உயிரிழந்தார். இது குறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்