கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
திங்கள்சந்தை அருகே டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
திங்கள்சந்தை அருகே உள்ள வாடிவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை. கேரளாவில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விமலா. இவர்களுக்கு ஜெபிலா (வயது20) என்ற மகளும், 2 மகன்களும் இருந்தனர். மகன்கள் இருவரும் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
மகள் ஜெபிலா வெள்ளமோடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி வீட்டு வேலை செய்யாமல் டி.வி. பார்த்து வந்ததாகவும், இதை தாயார் கண்டித்ததாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜெபிலா டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மதியம் ஜெபிலா சாப்பிட்டு விட்டு அறையில் தூங்க சென்று விட்டார்.
தற்கொலை
சிறிதுநேரத்தில் அறையில் இருந்து ஜெபிலா வாந்தி எடுத்த சத்தம் கேட்டு தாயார் விரைந்து சென்று பார்த்தார். அப்போது அவர் விஷம் குடித்து வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெபிலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விமலா இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.