ரெயில் முன்பு நின்று கல்லூரி மாணவர் தற்கொலை

குளித்தலையில் ரெயில் முன்பு நின்று கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-04 17:53 GMT

சரக்கு ரெயில் மோதியது

கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடை மேடையின் இறுதி பகுதியில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்து இருந்துள்ளார். அப்போது திருச்சியில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று குளித்தலை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது ரெயில் வந்த தண்டவாளத்தின் நடுப்பகுதியில் அந்த வாலிபர் திடீரென வந்து நின்றுள்ளார். இதைப்பார்த்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். இருப்பினும் அந்த வாலிபர் ரெயில் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து செல்லாமல் சரக்கு ரெயிலுக்கு முன்பு நேருக்கு நேர் நின்றுள்ளார். இதனால் சரக்கு ரெயில் வாலிபர் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சிலர் நேரடியாக பார்த்துள்ளனர். இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்

மேலும் அங்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் அந்த வாலிபரின் உடையில் இருந்த கல்லூரி அடையாள அட்டையை எடுத்து பார்த்தனர்.அப்போது அந்த வாலிபரின் பெயர் கோபிநாத் (வயது 20) என்றும், ஆதனூரை சேர்ந்த அவர் அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தது தெரியவந்தது.இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த கரூர் ரெயில்வே போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கோபிநாத் எதற்காக ரெயில் முன்பு நின்று தற்கொலை செய்து கொண்டார் என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்