கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

வீரவநல்லூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-03 19:29 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உப்புவாணியமுத்தூரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகள் ஆனந்தி (வயது 20). இவர் வெளியூரில் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த ஆனந்தி குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த ஆனந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி-முதியவர்

வள்ளியூர் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (38). பந்தல் கட்டும் தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் முத்தையா (85). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் முத்தையா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்