விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை; இறுதிசடங்கில் மயங்கி விழுந்து தந்தை சாவு

மதுரையில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி சடங்கில் மயங்கி விழுந்து தந்தை பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-30 20:48 GMT

மதுரையில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி சடங்கில் மயங்கி விழுந்து தந்தை பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர் தற்கொலை

மதுரை கீரைத்துறை ஆதிமூலம்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சிவஆனந்தமணி (வயது 21). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவஆனந்தமணி திடீரென்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மயங்கி விழுந்து தந்தை சாவு

சிவ ஆனந்தமணிக்கான இறுதி சடங்கை அவரது தந்தை கணேசன் நேற்று நடத்தி கொண்டிருந்தார். அப்போது மகன் இறப்பை தாங்க முடியாமல் வேதனையில் அழுது கொண்டே இருந்தார். பின்னர் இறுதி சடங்கு முடிந்து வீட்டிற்கு நடந்து வந்த போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது கணேசன் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகன் இறப்பினால் ேசாகம் தாங்காமல் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்