கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-06 17:35 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் தம்பிசிவம். இவரது மகன் சிவப்பிரகாஷ்(வயது 17). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை தம்பிசிவம் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த சிவப்பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்